Posted on 1 Comment

Total Surrender

சரணாகதி

Image result for boy blessed by sathya sai baba

ஏன் இந்த மனவுளைச்சல் ! உன் விவகாரம் அத்தனையும் நான் பார்க்கும்போது ! நீ என்றைக்காவது சரணாகதி என்னிடம் அடையமாட்டாயா என்று நான் காத்துக்கொண்டு இருக்கிறேன் !! அதன்பின் உனக்கு எதற்கு இந்த வீண் கவலை !
உன்னுடைய அத்தனை பயத்தையும் அவநம்பிக்கையையும் மூட்டையா கட்டி தூக்கி எறிந்துவிட்டு ஓடி வா என்னிடம் !!

என்னை நம்பாமல் நீ ஒரு எடுப்பார் கைப்பிள்ளையாகிவிட்டாயே ! அதெல்லாம் வேண்டாம் உனக்கு ! கண்ணை மூடிக்கொண்டு என்னை பரிபூரணமாக நம்பு !

Image result for sathya sai closing his eyes

சரணாகதியென்றால் என்னவென்று நினைத்துக்கொண்டாய் ? உன் எண்ணங்களை பிரச்சனைகளிலிருந்து விலக்குவது ! அவைகளை இன்னல்களிலிருந்து திசை திருப்புவது ! எல்லாவற்றையும் என் கைகளில் போட்டுவிட்டு, இறைவா ! தங்கள் திருவுள்ளப்படியே நடக்கட்டும் ! தங்கள் சித்தம் என் பாக்கியம் என்று இருந்துவிடுவது ! அதாவது, இறைவா, எனதனைத்தையும் நீயே உன் பொற்கரங்களில் தாங்கிக்கொண்டாய் ! இதையும் நீயே என் அளப்பரிய நன்மைக்காக சமாளித்துவிடுவாய் என்று இருப்பது ! இதுதான் சரணாகதி !!

Image result for sathya sai holding child

நன்றாக ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள் ! பலனை நினத்தாலே சரணாகதி அதோகதிதான் ! அதாவது, என்னாடா இது , போற போக்கே சரியில்லையே என்று மனதில் பட்டாலே உன்மேல் உள்ள என் அன்பை நம்பிக்கையிழந்து பறக்கவிட்டுவிட்டாய் என்றுதான் ஆகிவிடும் ! நீயே உன் வாழ்வின்மீது நான் ஆட்கொண்டிருப்பதை கவனம் கொள்ளாமல் நிச்சயித்துவிட்டாயே ! என்னிடமிருந்து எதுவும் தப்பாது என்பதை நீ கவனிக்கவில்லையே !

Image result for sathya sai holding child

எதையெடுத்தாலும், எப்படி இது முடியப்போகுதோ ! என்னதான் நடக்குமோ என்று எண்ணிக்கொண்டிருக்காதே ! இந்த சலனத்தின் பிடியுள் நீ மாட்டிக்கொண்டால், என்பால் உனக்கு நம்பிக்கை இல்லை என்று அர்த்தமாகிவிடும் !

சரி ! போனது போகட்டும் ! இனியாவது உன் பிரச்சனையை நான் தீர்க்கட்டுமா வேண்டாமா ! அதற்கப்புறம், அதைப்பற்றியே புலம்புவதை நிறுத்திகொள் !

Image result for sathya sai closing his eyes

என்னை பரிபூரணமாக சரணடைந்தால் உன்னை நான் வழிநடத்திச்செல்வேன் ! உன் பாதையைவிடுத்து வேறுபாதையில் அழைத்துச்சென்றால் உன்னை ந்டக்க வைப்பேனா ? உன்னை என் கை அரவணைப்பில் எந்திச்செல்வேன் !!

எது உன்னை திகைக்கடிப்பது தெரியுமா ? உன் பகுத்தறிவும், புலம்பலும், பிடிவாதமும், வந்த விலைக்கு உன்னையே விற்றுகொள்ளும் மனப்போக்கும்தான்!

Image result for sathya sai miracles

பொருட்செல்வமோ அல்லது அருட்செல்வமோ ! இப்போதே நான் அள்ளித்தர முடியும். எங்கே, என் பக்கம் திரும்பு ! அதை நினைத்துக்கொள் ! கண்களை மூடு ! அமைதியாக இரு. பரிபூர்ணமாக உன் பிரர்த்தனையை நம்பிக்கையோடு என் மேல் செலுத்தும்போது, உனக்கு தாராளமாக எதுவும் கிடைக்கும் !

கஷ்ட நேரத்தில், என்னை பிரார்த்தனை செய் ! உனக்காக நான், நீ விரும்பும்படி பரிகாரம் செய்வேன் !

Image result for child praying

என்னை நீ நம்பமாட்டாய் ! ஆனால், உன் கோரிக்கைகளை நான் நிறைவேட்டவேண்டும் என்று எதிர்பார்க்கிறாய் ?

Image result for sathya sai with stethoscope

மருத்துவருக்கே எப்போதும் ஆலோசனை சொல்லும் நோயாளி போல் என்னிடம் நடந்துகொள்ளாதே ! அப்படி செய்யாதே ! அதைவிட, கவலைக்கிடமான நேரத்திலும், இதைச்சொல் : ” இறைவா போற்றி ! இந்த இன்னலுக்காக உனக்கு நன்றி ! இந்த பூலோகத்திலும், மேலோகத்திலும் உன் ஆணைப்படியே எல்லாம் சரிவர நடக்கட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் . உனக்குத் தெரியும் எது எனக்கு சிறப்பானது என்று! “

Image result for child praying

சில நேரங்களில், அழிவு குறைவதற்கு பதில் ஏறிக்கொண்டே இருக்கிறதே என்று தோணும் ! இதற்க்கெல்லாம் கலங்காதே ! கண்களை மூடிக்கொள் ! நம்பிக்கையுடன் இதைச்சொல் ! : “தங்கள் பணி நடந்தேறும் ! ” இதை உன் நினைவில் இருத்து ! இதை இவ்வாறு பேசும்போது தேவைப்பட்டால் நான் ஒரு அற்புதம் நிகழ்த்துவேன் ! ஒட்டுமொத்தமாக என்னை நீ நம்பும்போது என் எண்ணப்படி அது நடக்கும் !

Image result for sathya sai showing hand

என் எண்ணமெல்லாம் எப்போதும் உன் மேல்தான் ! ஆனால், என்னை நீ முழுதும் நம்பினால்தான் உனக்கு நான் முழுமையாக உதவ முடியும் !

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா

1 thought on “Total Surrender

  1. […] is a difference between trust and faith. Trust is 100% faith with total surrender. Sri Sathya Sai Balvikas Students of Saitech Premises performed a role play on Trust in God at Farm […]

Leave a Reply