Creative work done by Nagasai Apoorva, our Balvikas Student from Germany.
GOD is trinity, viz., Generator (Lord Brahma), Operator (Lord Vishnu), Destroyer (Lord Shiva). We worship our Guru as God.




Creative work done by Nagasai Apoorva, our Balvikas Student from Germany.
GOD is trinity, viz., Generator (Lord Brahma), Operator (Lord Vishnu), Destroyer (Lord Shiva). We worship our Guru as God.





அப்பாவும் கடவுளும் !
நாம் எங்கிருந்து வந்தோம்?
அப்பாவிடமிருந்து!
நாம் எங்கே தஞ்சம் புகுந்தோம்!
அம்மாவிடம் !!
நாம் எங்கே பயணிக்கிறோம்?
வளமும், வஞ்சகமும் நிறைந்த உலகத்தில் !!!
நாம் எப்படி வாழ்கிறோம்?
கூரான 32 பற்களுக்கிடையே வாழும் நாக்கை போல!
நமக்கெதற்கு அறிவு வேண்டும்?
நல்லது கெட்டது தெரிந்துகொள்ள!
அதை எவ்வாறு பெறுவது?
குருவின் மூலமாக.
நமக்கெதற்கு குரு தேவைப்படுகிறார்?
குரு நமது மனசாட்சியின் வெளிவடிவம்.
அம்மா நம் ஆரம்பகாலத்து குரு.
அப்பா நம் கலாச்சாரத்தின் குரு.
ஆசிரியர் நம் வாழ்க்கைக்கு குரு.
மனசாட்சி நம்மை வாழவைக்கும் குரு.
இறைவன் நம்மை பிறருக்கு குருவாக்கி பெருமைப்படுத்தும் குரு.
இறைவன் நாம் கேட்டவுடன் கொடுப்பான் அப்பாவாக!
இறைவன் நாம் கேட்காமலே கொடுப்பான் அம்மாவாக!!
இறைவன் நாம் எவ்வளவு கேட்டாலும் தட்டிக்கழிப்பான் ஆசிரியனாக!!!
எதற்கு?
தக்க தருணத்தில் தகுதியானதை தகுதியானவர்களுக்கு கொடுப்பதற்காக.
வேண்டாமலேயே வேண்டியதை வேண்டிய நேரத்தில் கொடுக்கும் இறைவனை நாம் ஏன் வேண்டவேண்டும்?
எல்லாவற்றையும் இறைவனே செய்துவிட்டால் நீ எதற்கு?
நம் அப்பா நம்மை இன்னொரு நல்ல அப்பாவாக மாற்றிவிட்டு கடவுளாகிவிடுகிறார்.
இறைவனும் அப்படித்தான்!!
தன்னிடமிருந்தே தன்னை பிரித்து தன்னிஷ்டப்படி வாழவைத்து, அறிவு முதிர்ந்த நேரத்தில் தன்னை அறியப்படுத்தி தன்னுடன் சேர்த்துக்கொண்டு பிறர்க்கும் இறைவனாக்கிவிடுகிறான்.
தன்னையறிவதே தலைசிறந்த கல்வி !!
தன்னை முன்னிலைப்படுத்தி கற்கும் தற்கால கல்வி செல்லின் செல்ஃ பி போல!
தன்னை முன்னிலைப்படுத்துவது தம்பட்டம்!
உலகமே நம் செயல்திறனை முன்னிலைப்படுத்தும்போதுதான் நமக்கும முதுகலை பட்டம் கிடைத்தது போல.
நம்மை விடிவெள்ளியாக பல குடும்பங்களுக்கு வாழவைக்கும்போது இறைவன் நம்மையே இந்த உலகத்திற்கு பரிசாகக்கொடுக்கின்றான்!
முதலில் நம்மை சரிசெய்வோம்! இறைவன் நம் மூலமாகத்தான் இவ்வுலகை சரிசெய்ய திட்டமிட்டுள்ளார்!!
என்னுள் உறங்கிக்கொண்டிருக்கும் என் இறைவனே சீக்கிரம் எழுந்திடு!
காலால் உதைத்தே கருத்தறிவிப்பவனே உன்னில் உறங்கிக்கொண்டிருக்கும் என்னை எழுப்பிவிடு !