தமிழ்நாட்டில், ஒவ்வொரு வீட்டின் முன்புறமும் கோலம் என்கின்ற ஒரு சிறந்த கலை வரைபடம் அலங்கரிக்க காணலாம். இந்த வரைபடங்கள் வெறும் அலங்காரம் மட்டுமல்ல, இதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. திருவிழா காலங்களிலும், எந்த நல்ல செயல்பாடுகளிலும், கோலம் இன்னும் பெரியதாக வரையப்படுகிறது. சில சமயங்களில், கோலம் தெரு வரை நீண்டிருக்கும்!! இது ஒரு பெண்ணின் படைப்புத்திறனை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது.

கோலம் என்பது ஒரு கட்டம் மற்றும் வடிவ புள்ளிகளைச் சுற்றி வரையப்பட்ட வளைந்த சுழல்களால் ஆன வடிவியல் வரைபடமாகும். இது சில நேரங்களில் ரங்கோலி என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது மிகவும் விரிவாகவும் வண்ணமயமாகவும் இருக்கும். கோலம் கிமு 2500 வருடங்களுக்கு முன்பாக உருவானது. இம்மாதிரி வரையப்படும் கோலங்கள் வீடு அல்லது வணிகத்திற்கு செல்வத்தையும் செழிப்பையும் கொண்டு வர உதவும் என்று நம்பப்படுகிறது.
கோலத்தின் கலை வடிவத்தில், புள்ளிகள் மற்றும் கம்பிகள் மூலம் சாய்சதுரம், சதுரம், முக்கோணம் என்பதுபோன்ற பல வடிவங்களை மூலாதாரமாக வைத்து பல பின்னல் கோலங்கள் பிரமிக்கத்தக்க வகையில் வரையப்படுகின்றன.

கோலம் வரையும் போது நம் பெண்கள் புத்தி, மனம் மற்றும் உடலுக்கு அதிகாலை வேளையில் நல்ல பயிற்சி கொடுக்கின்றார்கள். இதன் மூலம் பெண்களுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைப்பது உறுதி! நம் தாய்மார்கள் ஒவ்வொருவரும் இந்த நல்லதொரு கலையை தங்கள் பெண்களுக்கு கற்றுத்தரவேண்டும்!
திருமதி.பிருந்தா என்கின்ற பேராசிரியை கோலம் மற்றும் அதன் கணிதவியலைப்பற்றி கீழ்க்காணும் ஆராய்ச்சி கட்டுரையை எழுதியுள்ளார்கள்! அதை படித்து பயன்பெற வேண்டுகின்றேன்.